August 13, 2016

போதைப் பொருள் நடவடிக்கைகளை ஒழிக்க ஜனாதிபதி- பிரதமர் விசேட நடவடிக்கை!

தலைநகர் கொழும்பில் போதைப் பொருள் நடவடிக்கைகளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.


எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பை மைமயாகக் கொண்டு இயங்கி வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த பாரியளவில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விமானப்படையினரின் ஒத்துழைப்பும் இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் இந்த நடவடி;ககை குறித்து ஒரு மாத காலத்தின் பின்னர் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

மீளாய்வு செய்யப்பட்ட குறைநிறைகளை சீர்தூக்கிப் பார்த்து அடுத்த கட்ட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment