August 6, 2016

இலங்கையில் நாய்கள் மூலம்ப ரவும் பாவோ நோய் வைரஸ்: அச்சத்தில் மக்கள்!

பாவோ நோய் வைரஸ் மூலம் பரவும் ஒரு வித நோயாகும். நாய்கள் மூலம் தொற்றும் நோயாகும். இந்நிலையில், யாழ் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளான நாய்கள் கடந்த இரண்டு மாதங்களாக ‘பாவோ’ நோய்த் தொற்றின் தாக்கத்துக்கு இலக்காகி வருவதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்கான நாய்க்கு ஆரம்பத்தில் உணவில் நாட்டமிருக்காது. பின்னர் கடுமையான வாந்தி, வயிற்றோட்டம், இரத்தத்துடன் வயிற்றோட்டம் அல்லது நீரிழப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

 
கடந்த இரண்டு மாதத்தில் மாத்திரம் ‘பாவோ’ நோய்த் தொற்றுக்கு இலக்கான 30ற்கும் மேற்பட்ட நாய்களுக்கு எம்மால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பல நாய்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாக உயிரிழந்திருக்கின்றன எனவும் எஸ்.சி. விமலகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வருடாந்தம் இந்த நோய் உருவாகுவதைத் தடுப்பதற்கான தடுப்பூசியை ஏற்றிக் இந்த நோயைத் தொற்றலை தடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நாய்கள் உயிரிழப்பதை குறைத்துக் கொள்ள முடியும்.

எனவே, எமது கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பகுதிகளுக்குற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் இந்த நோய்த் தொற்று தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment