இந்திய கடற்படைக்கு சொந்தமான “சமர்த்” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (18) வருகைத் தந்துள்ளது. குறித்த “சமர்த்” கப்பல் நல்லெண்ணம் அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் “சமர்த்” கப்பலின் பிரதான கட்டளைத் தளபதி ஆனந் பிரசாத் படோலாவுக்கும், மேற்கு பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வந்துள்ள சமர்த் கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment