August 14, 2016

மூவின மக்களும் விட்டுக்கொடுப்புடன் நடந்தால் தான் நிரந்தர தீர்வை பெறலாம்!- முன்னாள் போராளி!

கடந்த 30 வருட காலமாக போராட்டத்தில் சிக்கித் தவித்த தமிழ் மக்களுக்கு உரியநிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் அரசு எதுவிதமுயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.


இதனால்தான் கடந்த காலத்தில் இலங்கையில்நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து விசாரணைகளைமுன்னெடுக்க வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புன்றார்கள்.

வெளிநாடுகளிலுள்ள சட்ட நிபுணர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள் போன்றோர்கள்அக்குழுவில் இடம்பெறுவதுதான் மிக நன்று.

இலங்கையிலிருந்து இவ்வாறானதொரு குழு உருவாக்கம்பெற்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு ஏதாவது ஓர் பாதிப்பு வந்திடுமோ என்ற நோக்கில்விசாரணைகள், மற்றும் தீர்வுகளும், மாற்றம் பெறும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

இவைகளைகருத்தில் கொண்டுதான் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் உள்வாங்க வேண்டும் எனகருதுகின்றோம்.என முன்னாள் போராளியான நியூசன் போல் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிகலந்துரையாடுவதற்கான செயலணி அமர்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் யார் குற்றம் செய்தார்கள் என்பதை பார்க்க வேண்யதில்லை. யுத்தத்தில் இருசாராருக்கும் பாதிப்பு வருவதென்பது வழமையானமாகும்,

ஆனால் திட்டமிட்டஅழிப்புக்களுக்கும், சதித் திட்டங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூறியேஆகவேண்டும், அவற்றுக்குரிய தீர்வுகள் கிடைக்கத்தான் வேண்டும்.

கடந்த போராட்டத்தில் 90 வீதம் பாதிப்படைந்தவர்கள் தமிழ் மக்கள்தான். கால்கைகளை இழந்து போயும் தொழில் வாய்ப்பின்றியும் பல முன்னாள் போராளிகள் உள்ளார்கள்.

இவ்வாறானவர்களுக்கு அரசாங்கம் அரச தொழில் வாய்ப்புக்களையோ அல்லது வேறு ஏதாவதுதொழில் வசதிகளையோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

எனவே அரசாங்கம் இனிமேலும் இன வேறுபாடுகள் காட்டாமல், பாதிக்கப்பட்டுப் போயுள்ளதமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாழ்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மேலும் அசாதாரண நிலைக்குஇட்டுச் செல்ல இடமளிக்கக் கூடாது.

முஸ்லிம் மக்களையும் உள்வாங்கி முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதையும்ஆராய்ந்து அவர்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், முஸ்லிம் மக்களும், தமிழ்மக்களும், ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள்,



ஆனால் சில அரசியல் வாதிகளின்செயற்பாடுகளினால்தான் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்குமிடையில் விரிசல்வருகின்றன.

எனவே மக்களோடு மக்களாக இருந்து இனவாதத்தைத் தூண்டாத செயற்பாடுகளில்ஈடுபடும் சமூகத் தலைவர்களை தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்ய வேண்டும்.

2003ற்கு முற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்போராளிகளும் இருந்துள்ளார்கள். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த முஸ்லிங்களும் உள்ளார்கள்.

முஸ்லிங்கள் போராட்டத்தில் இணைந்திருந்ததைஅப்போதிருந்த சில அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் காரணமாகவே அவை தப்பானஅபிப்பிராயமாகக் கொண்டு வந்தார்கள்.

எனவே தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்.அதுபோல் சிங்கள் மக்களும் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டால்தான்இனப்பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ளாலாம்.

அடுத்து தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும், சிங்கள மக்கள் தமிழ் படிக்கவேண்டும், சிங்கள மக்கள தமிழ் படிக்காமல் தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும்என்பது அநீதியான செயற்பாடாகும்.

என்னைப் பொறுத்தளவில் இந்த நாட்டிலே இரண்டுஇனங்களும், 2 மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எனது பார்வையில் 4 மதங்களும், 2மொழியும்தான் இந்ந நாட்டில் உள்ளன.

தமிம் பேசும் மக்களும். சிங்களம் பேசும்மக்களும்தான் இந்த நாட்டில் உள்ளார்கள். இதனை விடுத்து தமிழ் மக்கள், முஸ்லிம்மக்கள், பறங்கியர், சிங்களவர்கள் என பிரித்துப் பார்த்து பாகுபாடு காட்டி, கொண்டுஅரசியல் இலாபம் தேட முனைகின்றார்கள்.

எமக்கு ஏதும் பிரச்சனைகள் வாந்தலும் அவர்களது உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும்சிங்கள மக்களும் உள்ளார்கள். சிங்கள மக்கள் அனைவரும் கெட்டவர்கள் எனவும், அனைவரும்நல்லவர்கள் எனவும் கூற முடியாது

அதுபோல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் நல்லவர்கள்என்றோ அல்லது அனைவரும் கெட்டவர்கள் என்றோ கூறமுடியாது.

தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அவற்றை அரசாங்கம் ஆரம்பத்திலேயேதீர்த்து வைத்திருந்தால் கடந்த போராட்டம் இந்த அளவிற்கு வந்திருக்கமாட்டாது,

அழிவுகளும், இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கமாட்டாது. இவைகளனைத்தும்விட்டுக்கொடுப்பின்மையினாலேயே ஏற்பட்டிருந்தன.

எனவே தமிழ் பேசும் மக்களின்பிரச்சினைகளைக் கண்டறிந்து பிரச்சினைகளுக்கு இனிமேலாவது தீர்வு காணப்பட வேண்டும்.

எனவேமேலும் பிரச்சினைகளை விஸ்த்தரித்துக் கொண்டு போனால் இந்த நாட்டை வேறு ஒருநாட்டவர்தான் ஆளும் நிலமை மாறும்

எனவே இந்த இலங்கை நாட்டை சிங்கள மக்களும். தமிழ்பேசும் மக்களும் ஆள வேண்டும் என்பதையே நாம் எதிர் பார்க்கின்றோம்.

கடந்த காலப் பிரச்சனைகளை மீண்டும் கிளற ஆரம்பித்தால் அதற்கு முடிவு காணமுடியாது. அதனைவிடுத்து தற்போதைய காலகட்டத்தில் எவை தேவையோ அவற்றை ஆராய்ந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

சிங்கள மக்கள் அவர்களின் இராணுவ வீரர்கள் மரணித்த தினத்தைஅனுஸ்ட்டிக்கின்றார்கள்.

அதுபோல் தமிழ் மக்களின் போராளிகள் மரணித்த தினங்களைஅனுஸ்ட்டிப்பதற்கு யாரும் தடை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment