தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை தப்பியோட முற்பட்டதாக தெரிவித்து , துப்பாக்கியால் சுட்டு அவரது மரணத்துக்கு காரணமானதாக இருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்கியதுடன் 20 இலட்சம் ரூபா நட்;டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1998ம் ஆண்டு பேதுருதுடுவ இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். இது தொடர்பில் குறித்த இராணுவ வீரருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட கால விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்த்தன, குறித்த முன்னாள் இராணுவ வீரரரை குற்றவாளி என அறிவித்ததனை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபா அபராதமும் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினருக்கு 20 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment