தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்தால் தேசிய அரசாங்கத்தில் இணைய தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை சீனாவின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பொருட்டு தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
மனித உரிமை மீறல்கள் போன்றவையும் இதில் உள்ளடங்கும்.
அரசாங்கம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவதானம் செலுத்தும்.
அதேநேரம் தற்போதைய முக்கிய தேவையாக இருக்கும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சிறிலங்காவின் அரசாங்கம் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினால், தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment