புதிய இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் ரம்புக்பொத்த
நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசாங்கம்
ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் இராணுவத்துக்குள் பிரதான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மேஜர் ஜெனரல்கள் 15பேரும் பிரிகேடியர்கள் மூவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று 16ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைவதை அடிப்படையாக கொண்டே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிய இராணுவத்தளபதி தனது கடமைகளை எதிர்வரும் 22ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொள்வார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கட்டாயவிடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இராணுவத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment