August 31, 2016

இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தின் சூத்திரதாரி விமல் வீரவன்சவே!

இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாலம் அமைப்பது குறித்த யோசனை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த அமைச்சின் மூலம் வௌியிடப்பட்ட "2011ம் ஆண்டின் தேசிய பௌதீக திட்டத்திலேயே" முன்வைக்கப்பட்டிருந்ததாக,
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 
"2011ம் ஆண்டின் தேசிய பௌதீக திட்டம்" என்ற புத்தகம் விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த வேளை அவரது அமைச்சினாலேயே வௌியிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் முதலீட்டுச் சபை மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சையும் இணைத்துக் கொள்ள யோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப் போவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் குற்றம் சுமத்துவதாக சுட்டிக்காட்டிய, எட்வட் குணசேகர, இந்தப் புத்தகத்தில் அதன் உண்மை, பொய் வௌியாவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment