August 17, 2016

திருகோணமலை நகரசபை சந்தைக் கட்டடத்தை விடுவித்தது இராணுவம்!

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள சந்தை பகுதியை இராணுவத்தினர் நகரசபை அதிகாரிகளிடம் இன்று கையளித்தனர். 2010ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சந்தை கட்டடம் நகரசபை அதிகாரிகளால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.


 
1997ஆம் ஆண்டு அப்போதைய நகரசபை தலைவராக இருந்த பெரியபோடி சூரியமூர்த்தி 65 இலட்சம் செலவில் இந்தச் சந்தைக் கட்டடத்தைப் புனரமைத்தார். இதனை 2000ஆம் ஆண்டு திறக்க முற்பட்ட காலப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை எழுந்திருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த கட்டடம் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது.

2005ஆம் ஆண்டு கடற்படையினர் இச்சந்தை தொகுதியை கையகப்படுத்தி அங்கு முகாம் அமைத்து இருந்தனர். அவர்கள் 2010ஆம் ஆண்டு அகன்று செல்ல இலங்கை இராணுவத்தினர் அதனை தமது முகாமாக பயன்படுத்தி வந்தனர். இச்சந்தை தொகுதி நகரசபையினர் அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது. இராணுவத்தின் 221ஆவது படை பிரிவு கஜபா படையணியின் லெப்டினன்ட் மனோரா ஜயதிலகா இதற்கான ஆவணங்களை நகரசபையின் வேலைகள் அத்தியட்சகர் கிரிந்திரனிடம் வழங்கினார்.



No comments:

Post a Comment