August 13, 2016

காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய இராணுவ ஒன்றியம், கூட்டு எதிரணியினருடன் இணைந்து இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள இராணுவ வீரர்கள் நினைவிடத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கும் அரசின் செயற்பாடு என குற்றம் சாட்டினர்.

 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தர்களின் குரல் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான பெங்கமுவே நாலக தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பவித்ரா வன்னியாராச்சி, காமினி லொகுகே, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினரின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் நேற்று நாடாளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment