பொலனறுவை – திம்புலாகலவை சேர்ந்த தமிழரான தந்தையொருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாசனத்தில் இணைத்துள்ளார்.
இந்நான்கு பிள்ளைகளுள் ஆண் பிள்ளைகள் மூவரும் திம்புலாகல துறவிகள் மடத்திலும், பெண் பிள்ளை பொலனறுவை அசரன சரண சுகத விகாரையிலும் துறவறம் பூண்டுள்ளனர்.
ஆண்பிள்ளைகள் மூவரும் 9, 14, 16 ஆகிய வயதுடையவர்கள் எனவும் பெண் பிள்ளை 11 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தற்போது பிரிவெனா கல்வியினை கற்று வருகின்றனர்.
சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக பணிப்பெண்ணாக சவூதி சென்ற தனது மனைவி தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவித தகவல்களும் கிடைக்க வில்லை என்றும், பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்கு யாருமில்லாத காரணத்தினாலும் அவர்களை துறவறத்தில் இணைத்துவிட்டதாக அவர்களின் தந்தையான சித்திரவேல் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம், வலது கை பூரண இயலாமையாலும், கண்பார்வை குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது துறவறம் பூண்டுள்ள தமது பிள்ளைகளுடன் திம்புலாகல மடாலயத்தில் வசித்து வருகின்றார்.
இவர் வெலிகந்த, செவணபிடிய, கரபொல கிராமத்தில் வசித்து வந்த வேளையில் குடும்ப பொருளாதார சிக்கல் காரணமாக காணித் தரகர் ஒருவரின் வார்த்தைக்கு அமைய தாம் வசித்து வந்த நிலத்தினை 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து விட்டு தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் தொடர்பான ஒரு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ள சுந்தரலிங்கம், 11 வருடங்களாக செங்கலடி மாவட்ட செயலகத்தில் காரியாலய உதவியாளராக கடமையாற்றி வந்திருந்த நிலையில் வருமானம் போதாமையினால் பொலனறுவையிலுள்ள அரிசி ஆலையொன்றில் கடமையாற்றி வந்தவர்.
தற்போது தனது இயலாமையின் காரணமாக மடத்தில் வசித்து வரும் இவரை தனது (ஆண்) பிள்ளைகள் மூவரும் துறவறம் பேணிவந்தாலும் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment