கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை உடனடியாக நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம், இன்று மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேற்படி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீட மாணவர் குழுக்களுக்கு 03, 06, 09 மாதங்கள் என்ற அடிப்படையில் நிர்வாகத்தால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி நிர்வாகத்தினருடன் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளபோதிலும், தடை நீக்கப்படவில்லையென மாணவர்கள் தெரிவித்தனர்.uni
பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடிப்படை வசதிக்குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை சீர்செய்ய முன்வராத நிர்வாகத்தினர் மாணவர் மீது வகுப்புத்தடையை விதிப்பதாகவும் அம்மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

No comments:
Post a Comment