July 12, 2016

தொடரும் கலாச்சார இனவழிப்பு, தமிழர் தாயகத்தில் புதிதாய் முளைத்தெழும் பௌத்த சின்னங்கள்!

கடந்த காலங்களில் தமிழர் தாயகம் தொடர்பான பல காத்திரமான ஆய்வு தொகுப்புகளை பிரசுரித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கழக 32ம் கூட்டத் தொடரில் கையளிக்கவென புதியதொரு ஆவணத்தை தயாரித்திருந்தனர்.


2009ம் ஆண்டின் பின் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பின் பன்முகப்படுத்தப்பட்ட விளைவுகளையும் குறிப்பாக சிறிதும் பெரிதுமாக புதிதாக கட்டியெழுப்பப்படும் பௌத்த சின்னங்கள் மற்றும் விகாரைகள் பற்றிய அறிந்திருப்போம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 68 வருட காலத்தில் ஏற்கனவே எம் கிழக்கு மாகாணத்தின் பெரும் நிலப் பரப்பு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது.

இன்று அது தமிழர் பெரும்பான்மையை இழந்து விட்டது. அடுத்த கட்டமாக வட மாகாணத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை உடனடியாகவும் எதிர்காலத்திலும் நிறுவுவதற்கான தார்மீக அடிப்படைகளை உருவாக்குவதில் சிங்கள அரச கட்டமைப்பு, இராணுவ ஆக்கிரமிப்பை பயன்படுத்தி வருகின்றது.

தொல்குடி மக்கள் தங்கள் கலாச்சார மதிப்புகள் அல்லது பாரம்பரிய இன அடையாளங்களை தனித்துவமாகப் பேணிப் பாதுகாத்து வரும் உரிமையுடையவர்கள்.

2009ம் ஆண்டின் பின்னர் பொதுவாகவும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்திற்கு பிற்பாடு முளைத்தெழும் இப்பௌத்த சின்னங்கள் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை அம்பலப்படுத்துகிறது.

ஒரு இனத்தின் தனித்துவத்தை உருக்குலைத்து அவர்களின் மரபு வழி தாயகத்தில் அரச முனைப்புடனான குடியேற்றங்களை உருவாக்க முயலும் சதித் திட்டங்களை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது ஒரு காத்திரமான முயற்சி.

No comments:

Post a Comment