யாழ் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லைவீதியிலுள்ள நெசவுசாலை ஒன்றின் பின்னால் உள்ள தோட்டக்காணியிலிருந்தே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டள்ளன.
குறித்த தோட்டக்காணியின் உரிமையாளர் நேற்றையதினம் அக்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் நிலத்தில் புதையுண்டநிலையில் இவ்வெடிபொருட்கள் தென்பட்டுள்ளன.
காணி உரிமையானரினால் வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற அனுமதிபெறப்பட்டு இன்றையதினம் விசேட அதிரடிப்படையினர் குறித்த காணியிலிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
11 மோட்டார் எறிகணைகள்,25 மோட்டார் பரா எறிகணைகள் மற்றும் 69 கைக்குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment