தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது .
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலி தாக்குதல் நடத்தி இன்று 29 ஆண்டுகள் கடந்து விட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் வீரவரலாறு உள்ளது. அவர்களின் ஒரே மூச்சு, சுதந்திரமான தமிழீழ தேசம். அதற்காக இவர்கள் வெடிகள் சுமந்து சென்று வீரவரலாறு படைத்தார்கள்.கரும்புலிகளின் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.
எமது தமிழீழ தேசத்தின் காப்பரண்களான கரும்புலிகள் ஞாபகார்த்தமாக 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஐரோப்பா தழுவிய ரீதியில் வழமைபோல் டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினரால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது 27.08.16 அன்று நடைபெறும் .
கரும்புலிகள் ஞாபகார்த்தமாக 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது தமிழர் விளையாட்டுத்துறை டென்மார்க் கிளையினரால் 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 22 வருடங்களை கடந்து இந்த ஆண்டில் 23 ஆவது ஆண்டில் காலடி பதித்துள்ளது.
எனவே ஐரோப்பாவில் உள்ள தமிழர் விளையாட்டுக்கழகங்களை எமது சுற்றுப்போட்டியில் கலந்து சிறப்பிக்கும்வண்ணம் கேட்டுக்கொள்கிறோம். இச்சுற்றுப்போட்டியானது டெனிஸ் தமிழ் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சட்ட விதிமுறைக்கேற்ப நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
‘மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம் .அந்தத் தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்.’
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

No comments:
Post a Comment