July 21, 2016

இனவாதத்திற்கும் விமலுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? சம்பந்தன் காட்டம்!

அப்பாவி பொது மக்களை கொன்றொழித்த கடந்த காலத்தை மீண்டும் உருவாக்க முயலும் செயற்பாடே அண்மையில் யாழில் இடம் பெற்ற தாக்குதல் என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார்.


இன்று பாராளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குழைக்கும் நோக்குடன் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நாட்டின் அமைதியை கெடுக்கும் முகமாகவே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசு என்ன தீர்வினை பெற்று தந்திருக்கின்றது? இதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றதா? எப்போது தீர்ப்புகள் கொடுக்கப்படும்? போன்ற கேள்விகளையும் விமல் வீரவன்ச முன்வைத்தார்.

இவற்றிக்கு பதிலளித்த எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்,

நாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான மாணவ மோதல்கள் இடம் பெற்று கொண்டே தான் இருக்கின்றன.

எனினும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவமானது, ஒரு சில அரசியல் வாதிகளினால் தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முறையான விசாரணைகள் இடம் பெற்று கொண்டே இருக்கின்றது. கூடிய விரைவிலேயே சம்பவத்தின் குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுவார்கள்.

இலங்கையை இனவாதமற்ற நாடாக மாற்றுவதே எமது குறிக்கோள் எனவும் இரா.சம்பந்தன் பதில் அளித்திருந்தார்.

குறித்த யாழ்ப்பாண மோதலினை பற்றி ஒரு சில அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி இனவாதம் பற்றிய கருத்துகளை முன்வைக்கின்ற போதும். அரசு தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் அவை மறுக்கப்பட்டு கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment