July 21, 2016

கடும் விவாதங்களின் பின் பிள்ளையானுக்கு கிடைத்த தீர்ப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன.குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிள்ளையானை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்த கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த விவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பில் பிள்ளையான் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரான பூ.பிரசாந்தன் ஆகியோருக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன.

சந்தேகநபர்களான இருவரும் பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது, இருவருடைய மனுவையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.

பரராஜ சிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரனும் மற்றும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment