July 27, 2016

தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து இராணுவம் எச்சரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தொடர்பில் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.


பங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைதல் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகள் பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி அபிலாஸைகளுக்கு எதிராக இவ்வாறு செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பூரண தெளிவு இருக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களைப் போன்று தற்காலம் இல்லை எனவும், காலம் வேகமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கைது செய்வதன் மூலம் அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் நிற்க நேரிடலாம் என அவர் இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் பதிலளித்துள்ளார்.


நவீன கால அச்சுறுத்தல்கள் மிகவும் சிக்கல் மிகுந்தவை என அவர் தெரிவித்துள்ளார். சிறிய ஆய்வு கூடமொன்றில் உயிரி ஆயுதமொன்றை வெகு விரைவில் தயாரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment