July 21, 2016

மஹிந்தவே படையினரை யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்த முயற்சித்தார் – ரணில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே படையினரை யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் நிறுத்த முயற்சித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு இணங்கியிருந்தார் எனவும், தமக்கும் அது ஆபத்தாக அமையும் என புரிந்து கொண்டதன் பின்னர் அதனை எதிர்த்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.


படையினரைக் காட்டிக் கொடுக்கவே மஹிந்த திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே படையினரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


யுத்தக் குற்ற நீதிமன்றமொன்றை அமைப்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாகவும் அதற்கு பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்திருந்த போது மஹிந்த யுத்த குற்றச் செயல் நீதிமன்றம் அமைப்பது குறித்து உறுதிமொழி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.


அதன் பி;ன்னர் அப்போதைய சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், தாருஸ்மன் ஆவணமொன்றில் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக இதனை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை ஜனாதிபதியே மீட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment