கடந்த வாரம் தமது காணிகளை கையளிக்க கோரி தமது காணியில் உள்ள இராணுவத்தினரிடம் அந்த காணி உரிமையாளர்கள் கடிதம் ஒன்றினையும் சமர்ப்பித்து ஒருவாரத்திற்குள் தமக்கு பதில் வழங்க கோரி இருந்தனர்.
அதற்க்கான பதிலை அறிவதற்காக இன்றைய தினம் பத்து மணியளவில் பரவிப் பாஞ்சான் காணி உரிமையாளர்கள் பரவிப் பாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்கு சென்றிருந்தனர்
தமது உயர் அதிகாரிகளுக்கு கடித்தத்தை அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் இன்னமும் தமக்கு பதில் தரவில்லை எனவும் அவர்கள் பதில் தந்ததும் தாம் அறியத்தருவதாகவும் குறித்த இராணுவ முகாம் மேஜர் கூறியுள்ளார்.
காணி உரிமையாளர்கள் 2015.10 .05 அன்று பரவிப்பாஞ்சான்னில் ஒருபகுதி காணி விடுவிக்கபட்டுள்ளதாகவும் இன்னமும் 54 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கபடாமல் உள்ளதாகவும் அதில் இப்பொழுது 20 குடும்பங்கள் கிளிநொச்சியில் தாம் வாழ்வதற்கு காணிகள் இல்லாமல் வாடகைக்கும் , உறவினர்களது வீடுகளில் இருப்பதாகவும் குறைந்தது அந்த 20 குடும்பங்களின் காணிகளையாவது முதலில் விடுவித்து தருமாறும் இன்றையதினமும் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்க்கு பதிலளித்த குறித்த இராணுவ முகாம் மேஜர் இங்கே இருக்கின்ற இருபது குடும்பங்களின் பெயர் விபரத்தை தமக்கு தருமாறு கோரியதுடன் நீங்கள் இன்று வந்து சென்றதனையும் தமது மேலதிகாரிகளுக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்க்கு காணி உரிமையாளர்கள் எவாராயினும் இதற்கான நல்ல பதிலை சீக்கிரமாக பெற்றுத் தரவேண்டும் எனவும் அவ்வாறு இல்லை என்றால் வருகின்ற கிழமை நாம் அனைவரும் நீங்கள் காணியினை விடுவிக்கும் வரைக்கும் இந்த முகாம் முன்றலிலே உண்ணாவிரதம் இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment