July 12, 2016

கிளிநொச்சியில் தனியார் மருந்தகம் ஒன்றிற்கு இன்று சீல் வைப்பு!


கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்கு கிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய இன்று மாலை ஆறு மணியளவில் குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான குழுவினர் குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் தர்மபுரம் மயில்வாகனபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவருக்கு மூன்று மாதங்களிற்கு முன்னர் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றதாக இனம்தெரியாத நபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் தர்மபுரம் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் அவ் தனியார் மருந்தாக வைத்தியர் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு கருவை கலைத்ததாக குறித்த சிறுமி தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டதை அடுத்து குறித்த மருந்தாக வைத்தியர் மற்றும் சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் ஒருவரும் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்தி உள்ளனர்.

வழக்கை விசாரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ .ஏ . ஆனந்தராஜ் குறித்த வைத்தியருக்கு ஒருலட்சம் ரூபா தண்டப்பணம் இ மற்றும் தலா ஒருலட்சம் வீதம் இரண்டு சதுரப் பிணைகளில் விடுவிக்கவும் சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞனிற்கு பதின்நான்கு நாட்கள் விளக்க மறியலில் வைக்கவும் மருந்தகத்தை சீல் செய்யவும் உத்தரவு இட்டார்.

இதனை அடுத்தே குறித்த மருந்தகம் இன்று சீல் வைக்கப்பட்டது

சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் சிறுமியின் காதலன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment