July 4, 2016

கிளிநொச்சியில் 300 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 300 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன்  சஜித் வழங்கி வைத்தார்.


கிளிநொச்சியில் 300 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காசோலைகள் வழங்கி வைத்தார் .
.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், ஞாயிறு  காலை 10.30  மணியளவில்  கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்   நடைபெற்ற  இன்  நிகழ்வில்
.
'2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள்    , பழைய வீடுகளில்  உள்ளவர்கள்   மற்றும் ,  பெண் தலைமைத்துவ  குடும்பங்கள் எனும்  அடிப்படையில்   புதிதாக  வீடு  கட்டுவதற்கும்  வீடுகளில்   திருத்தல்  வேலை  செய்வதற்கும்  சுமார் 300 குடும்பங்கள்  தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 1 லட்சம் ரூபா வீடமைப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் ஜெயசந்திரன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment