வவுனியா நகரில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் மர்ம நபர்கள் சிலர் மோட்டார்சைக்கிளில் உலாவி வருகின்றனர்.
மேலும் இவர்கள் இரவு வேளைகளில் தனியாக செல்லும் இளைஞர்கள் மீதும் பெண்கள் மீதும் தாக்குதல் நடாத்துவதுடன் பாலியல் சேஷ்டைகளும் விடுகின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இவர்களால் நடாத்தப்பட்டுள்ளது. பண்டாரிகுளம் பகுதியில் நபர் ஒருவர் வீதியில் நடந்து சென்ற வேளையில் பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த இந்த காடையர்கள் தாக்கியதில் அந்நபர் சுயநினைவிழந்து வீழ்ந்ததினால் தலையில் பாரிய காயத்துக்கும் உள்ளானார்.
கடந்த 27.05.2016 அன்று அதிகாலை 3மணியளவில் வைரவர் புளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினதும் அதனருகில் இருந்த கடைகளினதும் பெயர் பலகைகள் உடைத்து நொருக்கப்பட்டதும் அதேவேளை அதனை கேட்கச்சென்ற கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஒருவர் மீதும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடாத்தியிருந்தனர்
25.05.2016 வேப்பங்குளம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன் அவ்வண்டி உரிமையாளர் தவறாக பிரிதொரு நபரை பொலிஸாரிடம் அடையாளம் காட்டப்பட்டு அந்நபர் 15000 ரூபாய் பணத்தை நட்ட ஈடாக முச்சக்கரவண்டி உரிமையாளருக்கு வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்
இதேவேளை வவுனியா குட்செட் வீதியில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மீதும் இந்த காடையர்கள் தாக்குதல் நடாத்தினர் ஒரு தடைவை அல்ல மூன்று முறை அம்மாணவர்கள் தாக்கப்பட்டதுடன் பலர் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் இக்காட்டுமிராண்டிகளின் தாக்குதல் இளைஞர்களுடன் மாத்திரம் முடியவில்லை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் உயர்வகுப்பு மாணவியொருவர் ரியூசன் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் வைரவர்புளியங்குள குளகட்டில் வைத்து அம்மாணவியுடன் அங்க சேட்டைகள் விட்டதுடன் தகாத வார்த்தை பிரயோகங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அம்மாணவி கூச்சலிடவும் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர் இந்த காவாலிகள்
இதேவேளை அதே பகுதியில் வைத்து தந்தை ஒருவர் தனது மகளுடன் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் இக்காவாலிகளால் குளத்துக்குள் தள்ளிவிட்டனர் ஆனால் தெய்வாதீனமாக குளத்தினுல் விழவில்லை என்பதனால் விபரீதம் ஏதும் ஏற்படவில்லை நேற்றைய தினம் 01.06.2016 வவுனியா கற்குழி பகுதியில் இளைஞன் ஒருவருக்கு கத்தியால் குத்தியதுடன் அவ்விளைஞன் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் மீண்டும் அவ்விளைஞனை தாக்குவதற்காக வைத்தியசாலைக்குள் புகுந்து தாக்க முற்பட்ட போது வைத்தியசாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து கூறிய ஆயுதங்களும் மீட்கப்பட்டது
இந்த அணைத்து சம்பவங்களுக்கும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுளது அதேவேளை அணைத்து சம்பவங்களும் இரண்டு மோட்டார் சைக்கிளை வைத்து தான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இம்மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகள் பகலில் ஒரு இலக்கமும் இரவில் பிரிதொரு இலக்கத்தையும் பாவித்தே தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர் சிவப்பு மற்றும் நீல நிற Yamaha faizer என்ற மோட்டார் சைக்கிள்களே இவர்கள் பயன்படுத்திவருகின்றனர்
நேற்றையதினம் இக்காவாலிகளின் குழுவில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் மற்றைய மூவரையும் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மற்றும் சமூக அக்கறையுடைய இளைஞர்களும் தேடிவருகின்றனர்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குருமன்காட்டை சேர்ந்த சதீஸ் வயது 19,உக்கிளாங்குளத்தை சேர்ந்த ஜெரோசன்(19) இவரது தந்தை கிறிஸ்தவ மதபோதகர்(பாஸ்ரர்) கற்குழி ஜேகாந்த்(19),தோணிக்கள் சிவன்கோவிலடி கபி(19) இந்த நான்கு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் கற்குழியில் வாகன பலுதுபார்த்தல் நிலையம் நடாத்தும் உரிமையாளரின் மகன் தர்சன்(21) இவரே வைத்தியசாலையில் இருக்கும் மற்றைய நபராகும் இவருக்கு வவுனியா நீதவான் பிரிதொரு வழக்கில் இறுதி எச்சரிக்கை விடுத்து பிணையில் உலாவும் நபரென்பது குறிப்பிடத்தக்கது இவர்களுடன் வேப்பங்குளத்தில் ஜெனூசன் என்பவரையும் அவரது சிவப்புநிற மோட்டார்சைக்கிளையுமே பொலிஸார் தேடிவருகின்றனர் குறிப்பிட்ட நபரை அவனது பெற்றோர்களே அவனது நடத்தை சரியில்லையென்று வீட்டை விட்டு ஒதுக்கி உள்ளதாகவும் அறியப்படுகிறது
மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதேவேளை இவர்களால் பாதிக்கப்பட்டவரகள் இவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்நிலையத்தில் கேட்டு நின்றதாகவும் பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்ததாகவும் அறியப்படுகின்றது
இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதும் தமது கல்வியைத்தொடராமல் தவறான வழிநடத்தல் தவறான சேர்க்கையாலும் வழி தவறி சென்றுள்ளனர் எனவே இந்த நவீன உலகில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் மிகுந்த அக்கறையைடனும் பொருப்புடனும் இருந்தால் இவ்வாறானவர்கள் உருவாவதை தடுக்கமுடியும் என்பதே உண்மை.

No comments:
Post a Comment