June 2, 2016

போர் காரணமாக வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்துடையவர்களுக்கு இலங்கைக் கடவுச்சீட்டு?

போர் காரணமாக வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் இலங்கைக் கடவுச்சீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அரசியல் அழுத்தங்கள் மற்றும் போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்து அல்லது அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள், இலங்கைக் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

2011ம் அண்டு மார்ச் மாதம் ஏதிலி வெளிநாடுகளில் அந்தஸ்து பெற்றுக் கொண்டவர்கள் அல்லது அரசியல் தஞ்சமடைந்தவர்களுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்வதில்லை என மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அப்போதைய வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களுக்கு அறிவித்திருந்தது.

இதன்படி, இவ்வாறான இலங்கைப் பிரஜைகளுக்கு நீண்ட காலமாக இலங்கைக் கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை.

வெளிநாடு ஒன்றில் ஏதிலி அந்தஸ்துடைய இலங்கைப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

எனினும் தற்போதைய அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் கடவுச்சீட்டு வழங்குவது குறித்த கெடுபிடியை தளர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment