பொதுபலசேனா மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
முஸ்லிம் கவுன்சில் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், மீண்டும் ஒரு அளுத்கமை சம்பவம் போன்று இடம்பெறும் என்று மஹியங்கனையில் வைத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் நேற்று முன்தினம் 23ஆம் திகதியன்று விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்துடன் ஞானசார தேரரின் உரை அடங்கிய இறுவெட்டையும் அனுப்பியுள்ளார்.
அத்துடன் ஞானசார தேரர் காரணமாகவே களுத்துறை அளுத்கமையில் 2014ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இரண்டு பேர் பலியானதுடன் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் நாசமாகின என்று அமீன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஞானசாரரின் விடயத்தில் பொலிஸ் மா அதிபர் உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment