இலங்கையின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி உதவிகளை வழங்கி வரும் சீனாவே ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்புக்கு துணைபோனதாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் பக்க அறையில் பொருளாதார விளைவுகளும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது கிருபாகரன் இதனை தெரிவித்தார்.
ஆபிரிக்க கலாசாரத்திற்கான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரான்ஸ், பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் வீதி அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா நிதி உதவிகளையும் ஆளணிகளையும் வழங்கி வருகிறது. இதே சீனாவே தமிழர் மீதான இன அழிப்புக்கு துணைபோனது. சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போருக்கு உதவி வழங்கிய நாடுகளில் முதன்மை இடத்தில் சீனாவே உள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment