மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள் காரணமாக வன்முறைக் கலாச்சாரம் உருவாக்கம் பெறுவதாக மட்டக்களப்பு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என்ற போர்வையில் குறித்த நிகழ்வுகளுக்கு உதவி வழங்குவதாக கூறிக்கொண்டு உள்நுளையும் சிலர் பாடசாலை நிர்வாக விடயங்களில் தலையிடுவதுடன் குறித்த பாடசாலைகளின் நற்பெயருக்கும் பங்கம் விளைவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றிற்கும் கல்லாறு பாடசாலை ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டி ஒன்றின் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளாத சிலர் மைதானத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக குழப்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கும் அதனை கட்டுப்படுத்த முயன்ற பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பொலீசாருடன் தகராரில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் காரணமாக மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பரிசளிப்பு நிறுத்தப்பட்டது.
பின் கைது செயப்பட்ட வர்கள் விடுதலையின் பின்பு பரிசளிப்பு நடைபெற்றது.

No comments:
Post a Comment