“தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது.
எனவே, எதிர்ப்பினை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பார்ப்போம்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாம் இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதாக இருந்தால் டெல்லியில் அனுமதியினைப் பெற்றே சந்திக்க முடியும். இல்லாவிட்டால், அது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்கள்.
தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான நாள் இதுவரையில் கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன். இந்த எதிர்ப்புக்களை எல்லாம் சமாளித்து விட்டு சில நாட்களின் பின்னர் சென்று சந்தித்துப் பார்ப்போம்” என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment