ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிசென் ஹாப்ரே. இவர் கடந்த 1982 முதல் 1990 ஆண்டு வரை பதவி வகித்தார்.
அப்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திய 40 ஆயிரம் பேரை ராணுவம் மூலம் கொன்று குவித்து இனப்படுகொலையில் ஈடுபட்டார்.
மனிதாபிமானமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். கடத்தல், பாலியல் வல்லுறவு மற்றும் அடிமைத்தனமாக நடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார். எனவே அவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது அண்டை நாடான செனேகல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் போர்க்குற்றம் இழைத்த ஹாப்ரேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை அவரால் பாதிக்கப்பட்ட 250 பேர் டி.வி.யில் பார்த்தனர். தீர்ப்பை கேட்டதும் பெண்கள் மகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

No comments:
Post a Comment