தமிழ் மக்கள் பேரவையினால் சமுக பொருளாதார வலுவூட்டலிற்கான உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த உப குழுவில் யாழ் பல்கழகத்தின் பேராசிரியர் சிவநாதன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம் மற்றும் வைத்திய நிபுணர் கருணாகரன் ஆகியோர் உப குழு இணைப்பாளர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
அதில் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், தொழில் அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தவர்கள் அடங்கிய வடக்கு கிழக்கு தழுவிய 20 அங்கத்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் வடக்கு, கிழக்கில் ஒரு முறையான திட்டமிடலுடன் அபிவிருத்திகளை மேற்கொள்ள சகலவிதமான ஒத்துழைப்பையும் வழங்கல், பிரதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நேரான, எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித்திட்டங்களை இனங்கண்டு அது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இனங்காணப்பட்ட சில பொருண்மிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பொருண்மிய திட்டமிடல் குழுவாக இயங்குதல். வடக்கு கிழக்கிற்கான ஒரு பூரண பொருண்மிய வரைபை உருவாக்கி அதன் அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளத் தேவையான செயற்திட்டங்களை மேற்கொள்ளல்.
உடனடிச் செயற்திட்டங்களாக சில அடையாளங்காணப்பட்ட சிறியஇ நடுத்தர முயற்சியாண்மை மேம்படுத்தல் செயற்திட்டங்களை செயற்படுத்தல் என்பன பிரதான செயற்திட்டங்களாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment