June 3, 2016

தடை நீக்கப்பட்டாலும் அரசியல் தஞ்சம் கோரியோர் நாடு திரும்ப ஆர்வம் காட்டவில்லை!

தடை நீக்கப்பட்டாலும் அரசியல் தஞ்சம் கோருவோர் நாடு திரும்ப ஆர்வம் காட்டவில்லை என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

எனினும் அரசியல் தஞ்சம் கோரிய நாடுகளில் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை கருத்திற் கொண்டு தஞ்சம் கோரிய இலங்கையர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 887 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ளதாக சுவிஸ் குடிப்பெயர்வாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலங்கையர்களுக்கு எழில் கொஞ்சும் ரிக்கி மலைப் பிரதேசத்தில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரப்பிரசாதங்களை புறந்தள்ளிவிட்டு எந்தவொரு இலங்கையரும் சுவிட்சர்லாந்தை விட்டு நாடு திரும்ப மாட்டார்கள் என சுவிஸ் தகவல்கள் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தஞ்சம் பெற்றுக்கொண்ட அதிகளவான இலங்கையர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment