June 3, 2016

வடமராட்சியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக திரண்ட மாணவர்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பருத்தித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலகங்களினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த
புகையிலை, மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனைகளுக்கெதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பெருமளவு மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக அரச அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்களினால் மக்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள பாதிப்புக்கள் தொடர்பாகவும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் துண்டுப் பிரசுரங்களை தாங்கியவாறு வழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மத்தியிலும், சமூகத்திலும் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதேச செயலகங்களின் பணி முன்னுதாரணமாக கொள்ளப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்.





No comments:

Post a Comment