இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்
ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவின் பதாங் நகரின் தென் பகுதியிலிருந்து 155 கி.மீ. தொலைவில், 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங், சிக்லாப், பொங்கோல், தோபாயோ போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும், சில நிமிடங்களுக்கு இந்தோனேசியாவின் பாடாங் நகரிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலநடுக்கத்தால், வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளிலும் பொது இடங்களிலும் குழுமியதாக தெரிவிக்கப்படுகின்றது. சேதவிபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத அதேவேளை, சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ஆம் ஆண்டில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவாகி இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 2.8 லட்சம் பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

No comments:
Post a Comment