June 30, 2016

முல்லைத்தீவில் முப்படையினரின் கட்டுபாட்டில் 2586 ஏக்கர் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலக பிரிவைத் தவிர முப்படையினரின் கட்டுப்பாட்டில் 2586 ஏக்கர் நிலம். முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில்  2586 ஏக்கர் நிலம் காணப்படுவதாக புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.



தரைப்படை,கடற்படை,விமானப்படை,பொலீஸ் ஆகிய தரப்புகளிடமே மேற்படி பரப்பளவு காணிகள் உள்ளன. இதில் பொலீஸாரிடம் அரச காணி இருபது ஏக்கர் மாத்திரமே உண்டு ஏனையவை முப்படையினரிடம் காணப்படுகிறது.


அந்த வகையில் அரச காணிகள்   தரைப்படையினரிடம் 959 ஏக்கரும், கடற்படையினரிடம் 313 ஏக்கரும், விமானப்டையினரிடம் 14 ஏக்கரும், பொலீஸாரிடம் 20 எக்கரும் காணப்படுகிறது.


மேலும் மக்களுடைய காணி அனுமதிபத்திரம் உள்ள காணிகளில்  தரைப்படையினரிடம் 164 ஏக்கர் காணப்படுகிறது.


இதனைதவிர தனியார் உறுதிக் காணிகளில் தரைப்படையினரிடம் 737 ஏக்கர் காணியும், கடற்படையினரிடம் 379 ஏக்கர் காணியும் காணப்படுகிறது.


ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவைத் தவிர ஏனைய ஜந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே படையினர் இ;வ்வாறு காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.


அதனடிப்படையில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1671 ஏக்கர் காணியும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 316 ஏக்கர் காணியும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 141 ஏக்கர் காணியும், துனுக்காய் பிரதே செயலாளர் பிரிவில் 425 ஏக்கர் காணியும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 33 ஏக்கர் காணியும் படையினரிடம் காணப்படுகிறது.


ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 41465 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து முப்பதாயிரத்து 332  பேர் வாழக்கின்றனர். இதில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவைத் தவிர ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்களில் பலருக்கு இன்னும் சொந்தக் காணிகள் இல்லாதிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment