May 23, 2016

மஹிந்த சொத்து விபரம் எனக்குத் தெரியும் என்கிறார் மேர்வின் சில்வா !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தாருடன் நன்கு பழகியவர் என்ற ரீதியில்,
அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளமை தமக்குத் தெரியும் என்றும், அதுகுறித்து அரசாங்கம் உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சரும், கடந்த ஆட்சிக்காலத்தில் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவும் காணப்பட்ட மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல் குறித்து ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக கொழும்புக்கு வந்த மஹிந்தவுக்கு, கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கும் அளவிற்கு வசதி இருக்கவில்லையென தெரிவித்த அவர், கடந்த ஆட்சிக்காலத்தில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு கார் ஒன்றை மஹிந்த பரிசளிக்கும்போது, தாமும் உடனிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஊழலுக்கு எதிராக மஹிந்த ஆட்சியாளர்கள் எதிர்த்துப் பேச விடுவதில்லை என்றும், அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment