May 23, 2016

வெள்ளப் பாதிப்பு – மக்களை நேரில் சந்தித்த மைத்திரி!

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல மற்றும் கொலன்னாவை
ஆகிய பிரதேச மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.

முதலில் வெல்லம்பிட்டிய பிரதேசத்துக்கு சென்ற ஜனாதிபதி, வெல்லம்பிட்டி வித்தியாவர்தன வித்தியாலயத்துக்குச் சென்று அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளைக் கேட்டறிந்துள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளை பரிசீலனை செய்த ஜனாதிபதி, அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் குறைபாடுகளையும் விசாரித்தறிந்து கொண்டார்.

மக்களினால் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகளை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



No comments:

Post a Comment