May 30, 2016

வெள்ளத்தினால் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 25,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள சேத விபரமானது அண்ணளவான கணிப்பீடாகும். சரியான சேத விபரங்கள் திரட்டுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் எடுக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர உத்தியோத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கை உரிய பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சேதவிபரங்கள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment