May 22, 2016

தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக செம்மலை நியமனம்!

தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக மேட்டூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார்.

செம்மலை வருகிற திங்கள்கிழமை (23 ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா முன்பு தாற்காலிக சபாநாயகராகப் பதவியேற்று கொள்வார் என தமிழக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment