நிலைமாற்று கால நீதி சம்பந்தமாக இது வரை உலகளாவிய ரீதியில் நூறு வீதம் திருப்தி கிடைக்கவில்லை என்றே மக்கள் கூறுகின் றனர்.
இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன் வருமே தவிர பொறுப்புக்கூற இணங்கு வதில்லை. உண்மையைக் கண்டறிவது சம்பந்தமாக உலகில் இதுவரை 30க்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. ஆனால், அவற்றால் திருப்தி கிடைக்கவில்லை என்றே கூறுகின்றனர். இவ்வாறு மனித உரிமைகள் ஆணை யாளர் அம்பிகா சற்குணநாதன் கூறினார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேள னத்தின் வேண்டுகோளின் பேரில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த நிலைமாற்று கால நீதி பற்றிய பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு பிரிட்ஜ்வியூ ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய அவர் மேலும் கூறியதாவது-
நிலைமாற்றுகால நீதி என்பது இது போன்ற பல பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இன்னமும் சரியான பெயர் இல்லை. யுத்த காலத்தில் வன்முறை, மனித உரிமை மீறல் என்று பல அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கும். எனவே பாதிக் கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண் டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடவாமல் இருப்பதற்கு உத்தரவாதம் வேண்டும். நிலைமாற்றுகால நீதிக்கு நீதியை வழங் குவதால் உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல், மீண்டும் நடவாமல் இருப்பதற்கு உத்தரவாதமளித்தல் என்பன உறுதிப்படுத்தப்படும். நிலைமாற்றுகால நீதி ஏன் முக்கியமானது என்றால் ஆவணப் படுத்துவதே. ஏனெனில் யுத்தம் நடக்கும் போது உண்மைகள் புதைக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் இருக்கலாம். எனவே நடந்த உண்மைகள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அரசியல் வழிமுறை, பொறிமுறை, சமூக மட்டம் என்பனவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டவிடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர் புபட்டவையாகும். அவை கிடைப்பதன் மூலமே மக்கள் பயனடைவர். இதன் போது சிவில் விடயங்கள் பற்றியே பேசப்படு கின்றன ஏனைய கல்வி, சுகாதாரம், வாழ் வாதாரம் முதலிய விடயங்கள் பற்றிக் கதைப்பதில்லை. இவை எல்லாவற்றுக்கும் அழுத்தம் முக்கியமாகும். இது சகல நாடுகளுக்கும் பொருந்தும். உள்நாடு, வெளிநாடு, ஐக்கிய நாடுகள் சபை, வெளிநாட்டு சமூகம் ஆகிய சகல மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். பொதுமன்னிப்பு பற்றி பேசப்படுகின்றது. ஆனால் சகல குற்றங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க முடியாது. சிறு குற்றங்களுக்கு மட்டுமே இது சாத்தியமானது.
படுகொலை, உடல் உள ரீதியிலான மாற்றம், வாழ்வு முறை மாற்றம், குழந்தைகளைப் பெறுவதற்கு கட்டுப்பாடு, பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைத்தல் ஆகியன பகுதி அளவிலோ முழுமையாகவோ நடைபெற்றிருந்தால் அது இன அழிப்பாகும். ஆனால் இதற்கான நோக்கம் இருந்திருக்க வேண்டும். இதை நிரூபிப்பது எப்படி? இன்ன இன்ன சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் இவை செய்யப்பட்டதன் நோக்கம் இன அழிப்பு என்றும் நிரூபிக்க வேண்டும்.
நீதியும் சமாதானமும் ஏக காலத்தில் நடைபெற முடியாது. சமாதான காலத்தில் நீதி கேட்டால் மீண்டும் ஒரு பிரச்சினை தலைதூக்கலாம். பொறுப்புக் கூறல் என்பது சவாலுக்குட்பட்ட விடயமாகும். இதில் பொது மன்னிப்பு என்பது ஒரு விடயம் தற்போது உள்ள சட்டங்களிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. காணாமல் ஆக்கப்படுதல் சட்டக் கோவையில் ஒரு குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை. நீதித்துறையும் பலவீனமாகவுள்ளது. போதுமான நீதிபதிகள் சட்டத்தரணிகள் இல்லை. ஆயிரம் இரண்டாயிரம் பேரை விசாரிப்பது என்பது இலகுவான விடயம் அல்ல. அதற்கு 20, 30 வருடங்கள் ஆகலாம். சாட்சிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் என்பனவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆதாரங்கள் அழிக்கப்படலாம். அல்லது மறைக்கப்படலாம். ஊழல் மற்றும் அரசியல் தலையீடு என்பனவும் இருக்க மாட்டாது என்பதற்கில்லை.
எனவே, சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொறிமுறை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களது கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். இப்போது இதற்காக ஒரு குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி குழுவிடம் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

No comments:
Post a Comment