நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம்
எதிர்வரும் ஜுன் 8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் ஜுன் 8 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணிவரையில் இடம்பெறுவதுடன் இது தொடர்பான வாக்கெடுப்பு பிற்பகல் 6.30 இற்கு இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment