October 2, 2015

கடற்படையினரிடம் அலரி மாளிகையின் காவல் பணி ஒப்படைப்பு!

ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் வாயில் காவல் பணியில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த இலங்கை இராணுவ காவற்துறையினர் அந்த பணியை இலங்கை கடற்படையினரிடம்
கையளித்துள்ளனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவ காவற்துறையினர் இந்த பொறுப்பை ஏற்றனர். 6 மாதங்களின் பின்னர் இந்த பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment