தேசியத் தலைவரின் முப்பத்தோராவது திருமண நாள் மற்றும் இன்று ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 18வது பிறந்த நாள்.முப்பத்தோராவது திருமண வாழ்வில் கலந்து
கொண்டிருக்கும் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்த வயது இல்லாட்டியும் வாழ்க வாழ்க என வாழ்த்துறோம்.
பார் போற்றும் வீரத் திருமகனே! தமிழன் விடிவுக்காய் வந்துதித்த மாணிக்கமே! இல்லற வாழ்வில் நீ இணைந்தாலும் எமது விடிவுக்காய் வாழ்பவனே!
அண்ணா எங்களுக்காக போராட்டத்தில் உன் தோளோடு தோள் கொடுத்து எமக்காக வாழும் தாயகத்தின் பெண்களுக்குள் முதல்மையான எம் அண்ணியே! வேருன்றிக் கிளை பரப்பி பூத்துக் காய்த்து விண்ணுயர்ந்து நிழல் பரப்பும் விருட்சம் போல வாழ்வீர்கள் என வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment