September 17, 2015

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்லினால் வீதி விபத்துக்கள்!

முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நெல் அறுவடையின் பின் அறுவடை செய்த நெல்லை காபற் இடப்பட்ட பிரதான வீதிகளில் கொட்டி காயவிடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது இதனால் அடிக்கடி வீதி விபத்துக்களும் இடம்பெற்றவண்ணம் உள்ளது அண்மையில் மாங்குளம் மல்லாவி வீதியில் ஒருவரும் பரந்தன் பூனகரிவீதியில் ஒருவரும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் ஒருவரும் வீதியில் காயவிடப்பட்ட நெல்லைத்தவிர்ப்பதற்கு முயற்சி செய்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்
   நெல்லை காயவிடுவதற்கான இடம் இல்லாமையினால் இவ் நிலமைகள் ஏற்படுகின்றது விவசாய க்கிராமங்களில் நெல்லைக் காய விடுவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதன் மூலமே விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும் இவ்விடயத்தில் பொலீசாரும் கண்டும் காணாதது போல் செயற்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வீதியில் நெல் உலர்த்துவதை தடுத்தால் பல விபத்துக்களை குறைக்க முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment