தனது தாய்க்கு கடுமையான சுகவீனம் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் வந்த கோபாலராஜனை மீண்டும் லண்டனுக்கு திருப்பியனுப்பிவிடுமாறு லண்டனில் உள்ள அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்
சிலருடன் தொடர்பு கொண்டுள்ளார்சுமார் பத்தாயிரம் பவுண்ஸ் மற்றும் பெறுமதியான நகைகள், கைத் தொலைபேசிகள் என்பவற்றுடன் கடந்த யுன் மாதம் வந்த தனது கணவன் தற்போது முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள இளம் யுவதியுடன் தங்கியுள்ளதாக கோபாலராஜனின் மனைவி தெரிவித்துள்ளர்.
சிலருடன் தொடர்பு கொண்டுள்ளார்சுமார் பத்தாயிரம் பவுண்ஸ் மற்றும் பெறுமதியான நகைகள், கைத் தொலைபேசிகள் என்பவற்றுடன் கடந்த யுன் மாதம் வந்த தனது கணவன் தற்போது முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள இளம் யுவதியுடன் தங்கியுள்ளதாக கோபாலராஜனின் மனைவி தெரிவித்துள்ளர்.
தனது கடவுச்சீட்டையும் அவர் இலங்கை வரும் போது களவாகக் கொண்டுவந்துள்ளதால் தான் உடனடியானக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது உள்ளதாகவும் அவர் அழுதவண்ணம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த கோபாலராஜன் கடந்த 23 வருடங்களாக நிரந்தர விசாவுடன் வாழ்ந்து வருவதாகவும் வன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது என்ற போர்வையி்ல் பலருடன் தொடர்பை ஏற்படுத்தி தற்போது முல்லைத்தீவில் ஒரு இளம் பெண்ணுடன் தங்கியுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
தனது சகோதரன் இது தொடர்பாக முல்லைத்தீவுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டு வந்துள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 46 வயதான கோபாலராஜனின் புகைப்படங்கள் மற்றும் விசா, பாஸ்போட் ஆகியனவற்றின் புகைப்படங்களும் கள்ளக்காதலியின் புகைப்படங்களும் மனைவி அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் இலங்கை வெளிநாட்டு துாதரகம் மற்றும் லண்டன் பொலிஸ், இலங்கைப் பொலிசார் ஆகியோருக்கும் இது தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே கோபாலராஜன் தவறான தொடர்பைக் கைவிட்டு லண்டன் சென்று குடும்பத்தினருடன் இணைந்து கொள்வது அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இல்லையே சட்டநடவடிக்கைகளுடன் அவமானப்பட வேண்டியும் ஏற்படலாம் என்பதை கோபாலராஜன் அறிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment