சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறவுகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடம் சிறை அதிகாரிகளினால் பாலியல் இலஞ்சம்
கேட்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று(10,09,2015) வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறைக்கைதியொருவரின் மனைவி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தான் தனது கணவரைப் பார்வையிடச் செல்லும் போது, தன்னிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாகவும், இதனால் தான் மிகுந்த மனவேதனையுடன் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment