September 11, 2015

விக்ரமபாகு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை!

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.
பல்கலைக்கழக பேராசிரியராக மீளவும் விக்ரபாகுவை நியமித்து அவருக்கான நிலுவச் சம்பளத்தை வழங்குமாறும்�� பதவி உயர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவு இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை.
தாம் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிலுவைச் சம்பளம் வழங்கப்படுவதற்கு முன்னதாக, மூன்று மில்லியன் ரூபா நிலுவைச் சம்பளத்தை முற்பணமாக வழங்குமாறு எழுத்து மூலமாக போரிக்கை விடுத்தேன். எனினும் அந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என விக்ரபாகு கருணாரட்ன சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment