September 11, 2015

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு 32 மாத சிறைத்தண்டனை!

இலங்கை தமிழர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு இலங்கை தமிழருக்கு வோர்விக் க்ரௌன் நீதிமன்றம் 32 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
48 வயதான அருணாச்சலம் ஆரோக்கியநாதன் என்பவரை கொலை செய்தமைக்காக 34 வயதான கிரிதாஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே தண்டனையை பெற்றுள்ளவராவார்.
அருண் என அழைக்கப்படும் அருணோதயன், ஒரு கார் விபத்தில் சிக்கி, கால் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு போல்ஸ்ஹில் சாலையில் ஒரு கடையொன்றின் மேல் அமைந்துள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த, நிலையான விலாசம் அற்ற கிரிதாஸ் ஸ்ரீஸ்கந்தராஜா, கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி மூன்று பேர் கொண்ட குழுவுடன், அருணின் வீட்டிற்கு சென்று சண்டை பிடித்துள்ளதுடன் அவரின் தலையில் தாக்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து அருணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே இரத்தம் கட்டி உயிரிழந்துள்ளார்.
எனினும் இந்த கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment