இலங்கைத்தீவில் இருந்த ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் திட்டமிட்டு சிங்கள மாணவர்களை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் சிறீலங்கா அரசு நுழைத்து.
அது படிப்படியாக அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது ஒரு புறம் என்றால். சிங்கள தேசத்தில் உள்ள பல்கலை கழகம் போல மாற்றும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பு அரங்கேறத் தொடங்குகின்றது.
அதன்படி சிங்கள மாணவர்களால் முதலில் பல்கலை வளாகத்து வெளியே வெசாக் தினம் கொண்டாடப்பட்டது. அடுத்த தடவை அது பல்கலை வாசலில் பவுத்த கொடியை ஏற்றி பல்கலைக்குள்ளே வெசாக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
அங்கு திட்டமிட்டு சேர்க்கப்பட்ட சிங்கள மாணவர்கள் சிலர் தமிழ்மாணவர்களின் போராட்டங்களை படையினருக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை செய்து வந்தார்கள்.
இப்படியாக விஸ்வரூபம எடுக்கும் திட்டமிட்ட இன அழிப்பின் அடுத்த கட்டமாக பல்கலை வழக்கத்தின் உள்ளே சிங்கள மாணவனும், மாணவியும் பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்தும் நடவைக்கைகளை ஆரம்பித்து உள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.
தமிழர்களின் மூலதனமான கல்வியை அழிக்க சிங்கள அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதன் ஊடாக பல்கலை நிர்வாகமும் அதற்கு உடந்தையோ என்று ஐயம்கொள்ள வைக்கின்றது.
No comments:
Post a Comment