47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது கூட்டம் நாளை
(14)ஆரம்பமாவுள்ளது. இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பான விஷேட விசாரணை அறிக்கை இந்த கூட்டத் தொடரின் போது சமர்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் தயார்படுத்தப்பட்டுள்ள இந்த விஷேட அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தலைமையிலான குழுவினர் ஜெனிவா சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. மேலும் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்கள் ஜெனிவா செல்லவுள்ளதாக தெரியவருகிறது
No comments:
Post a Comment