September 1, 2015

தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் ,தமிழ் விருட்சம் ,கலை ,இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த    தனிநாயகம் அடிகளாரின் 35ம் ஆண்டு நினைவு தினம் 01.09.2015 இன்று காலை 8.30 மணிக்கு வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்துக்கு  முன்னாள் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளார் சிலை அடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில்,சிலையை பராமரிக்கும் அனிதா கொம் உரிமையாளர் திரு மா.சிவசிதம்பரம் அனுசரணையில்  இடம் பெற்றது .
இந்த நிகழ்வில் ரம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய உதவி பங்கு தந்தை உட்பட , நகர சபையின் செயலாளர் திரு க.சத்தியசீலன் ,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன் ,முன்னாள் உப நகர பிதா திரு .சந்திரகுலசிங்கம்  (மோகன் ), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் , ரோய் ஜெயக்குமார் , வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),கவிஞர் மாணிக்கம் ஜெகன் ,தேசமான்ய க.சிவஞானம் ,சமுக ஆர்வலர்களான கிறிஸ்டோபர் ,விக்னா,கேசவன் ,நிகேதன்,ஊடகவியலாளர்கள் ,கபில் ,அருள்  உட்பட பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் தமிழின்  பெருமையையும் ,தமிழையும் உலகறிய செய்ய தனிநாயகம் அடிகளார் தமிழ் ஆராச்சி மாநாட்டை முதலில் மலேசிய கோலாலம்பூரில் நடத்தினார் அதை ஆங்கிலத்தில் நடத்தினார்.அப்போது சமுக ஆர்வலர்கள் பலர் என் தமிழ் மாநாட்டை ஆங்கிலத்தில் நடத்துகிரிர்கள் என கேட்ட வெளிநாட்டு வெள்ளை காரர்கள் எம் மொழியின் பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே நடத்துகிறேன் என்றார்
நான்காவது மாநாட்டை யாழ்பாணத்தில் நடத்திய  போது இறுதி நாளில் 10 உயிர்கள் காவு கொள்ள பட்டத்தை நினைத்து  மனம் வருந்தினர் .5 ஆவது மாநாட்டு  நடக்க  முன் அவர் எம்மை விட்டு பிரிந்து விட்டார் என உரையாற்றினர் .
பின்னர்வரியிறுப்பாளர் சங்கம் ,மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர்   சந்திரகுமார் (கண்ணன் )அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைய அனிதா கொம் உரிமையாளர் திரு மா.சிவசிதம்பரம் அவர்களால் அனைவருக்கம் தேநீர் ,சிற்றுண்டி வழங்க பட்டமை குறிப்பிட தக்கது..




No comments:

Post a Comment